இன்று எமது சமூகத்தில் அதிக முக்கியத்துவத்தோடு நோக்கும் ஒன்றாக, தற்போது பரீட்சை புள்ளிகள் வெளியாகியிருக்கும் புலமைப் பரிசில் பரீட்சை விளங்குகின்றது. இன்று எமது சமூகத்தில் கா.பொ.த சாதாரன தர பரீட்சை மற்றும் கா.பொ.த உயர்தர பரீட்சைகளுக்கு கொடுக்காத முக்கியத்துவம் பெற்றோர்களால் கொடுக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணம் என்ன?, தற்போது 05 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரிசில் பரீட்சை தோற்றும் ஒரு மாணவன் அல்லது மாணவிக்கு அன்றாடம் எடுக்கும் ஓய்வு நேரங்களை கூட எடுத்துக் கொள்ள முடியாமல், தனது 05 ஆம் தர கல்வியை மிகவும் கடின உழைப்போடு உழகை;கும் நிலை காணப்படுகின்றது. அவர்களது அன்றாட நேர சூசியாக காலையில் பாடசாலைக்குச் செல்லுதல், மாலையயில் பாடசாலையில் பிரத்தியோக வகுப்பு, இரவில் மேலதிக வகுப்பு, அதிகாலையில் வகுப்பு என அவர்களிது சக்திக்கு மேற்பட்ட சுமைகளை சுமந்து, 05 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் அறுவடை செய்கிறார்கள். அதன் பின் இன்னும் ஓர், இரு மாதங்களில் அவர்களின் அறுவடையின் விளைச்சல் நம் கரங்களை வந்தடையும்.
அதன் பின் நடப்பது என்ன? மகிழ்ச்சியான கதைகள் சிறிய அளவும், சோகக் கதை நிறைய அளவும். காரணம் என்ற இளம் பிஞ்சுகளின் மனதில் அளவுக்கதிகமான ஆசைகளையும், ஆதங்கங்களையும், தனது பிள்ளை 05 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் வெற்றியடைய வேண்டும் என்ற நோக்கில் விதைத்து விடுகிறார்கள். பரீட்சை புள்ளி வெளியாகும் நாங்கள் எதிர்பார்க்கும் அந் நல் நாளில் சிலர் சிரிக்கிறார்கள், சிலர் அழுகிறார்கள். அந் நாளில் விரல் விட்டு என்னக் கூடிய சிறார்கள் வெற்றியாளர்களாக மகுடம் சூட்டுகிறார்கள். ஏனைய சிரார்கள் அவர்களது வாழ்வில் அவர்களே! நம்பிக்கை இளந்து, அவர்களது வாழ்வில் விரக்தியடைந்து மனம் சிதைந்து போகின்றார்கள். இதுவே அவனது வாழ்வில் முதல் தோல்வியாக காணப்படுகின்றது.
நாங்கள் எங்களது பிள்ளைகளின் இயழுமையை அறிந்து, பெற்றோர்களாகிய நாங்கள் இவர்கள் சுமக்கக் கூடிய சுமைகளை வழங்க வேண்டும். அப்போது தான் எமது பிள்ளைகள் வினைத்திறன் உள்ள மனிதனாக காணப்படுவார்.
நாங்கள் எங்களது பிள்ளைகள் மீது கல்வி அறிவில் அக்கரை காட்டுவதில் மிக முக்கியமான காலப் பகுதியாக கா.பொ.த சாதாரன தர பரீட்சை மற்றும் கா.பொ.த உயர்தர பரீட்சைகளுக்கு தயாராகும் காலப்பகுதியாகும். இக் காலப்பகுதியல் எங்களது கால நேரங்களை அவர்களுக்காக ஒதுக்கி, அவர்களது புறச் சுமைகளை நீக்கி அவர்களது உயர் கல்வி நடவடிக்கைக்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.
அவ்வாறான ஒத்துழைப்புக்களை வழங்குவதன் மூலம் எமது பிள்ளைகளை எதிர் காலத்தில் தலைசிறந்த கல்விமான்களாகவும், வைத்தியர்களாகவும், சட்டத்தரணிகளாகவும், ஏனைய நிர்வாகரீதியான உயர் பதவிகளிளை வகிக்கக் கூடிய நாட்டின் நற் பிரஜைகளை உருவாக்குவதற்கு அற்பனிப்போடு செயற்படுவது நம் அனைவரினதும் கடப்பாடாகும்.



0 comments:
Post a Comment
I was born on 1992.05.28 in trade and agricultural family. I am currently a member of the Sri Lankan Youth Parliament and Amir Ali in the public library, a computer data records and bring the serving.
From a young age for me! Was one of the most committed to community service. In the parliamentary elections held on 2013.05.06 youth I competed with the most votes won by the likes !!!
My career ambition, our Samanthurai city's politics, corruption-free, the people and the service can do, decent, respectful, people's minds and realize, people and love, people's confidence will be handed ballots received by the positions of the people, the executive leaders need to create.
Distinguishing between the leader, it would not be easy. To make this work effectively, every person born in Samanthurai should think and act.
"We try to present all the success! !!! The period of time for our generation '