Wednesday, November 5, 2014

ஜனாதிபதி தேர்தலைப் பற்றி சிந்திக்கும் கால கட்டத்தில், ஏன் சம்மாந்துறையில் பாராளுமன்றத் தேர்தலைப் பற்றி சிந்திக்கிறார்கள்....

சம்மாந்துறை மண்ணும் மக்களும் கடந்த 40 வருடமாக தக்க வைத்துக் கொண்டிருந்து பாராளுமன்ற பிரதிநிதித்துவம் எனும் சிம்மாசனத்தை இளந்த நிலையிலும், நிர்கதியாக்கப்பட்ட நிலயில் இன்று காணப்படுகின்றிரார்கள்.

சம்மாந்துறை மண்ணுக்கு முறையான பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதை இளம் பாலகன் முதல் முதியோர் வரை ஆசைப்படுகின்றனர். நியாயமான கோரிக்கையும், மனுவும் தான்! ஆனால் அவர்கள் அதை எப்படி பெற்றுக் கொள்வது என்ற விடயத்தில் மிகப் பாரிய தவருகளை விடுகின்றார்கள்.

அது அவர்களின் தவரல்ல! இன்று மக்கள் தங்களது மார்க்கத்து பின்பற்றுகிரார்களோ! இல்லையோ!, தங்களது மார்க்க வழிகாட்டியான அல்-குர்ஆன், அல்-ஹதீஸ், பகவத்கீதை போன்ற பொக்கிஸஹ்களை பின்பற்றுகிரார்களோ! இல்லையோ!, தங்களது இறைத்தூதர்கள், கடவுள்களை பின்பற்றுகிரார்களோ! இல்லையோ!, அரசியல் கட்சிகளையும், அதன் தலைவர்களையும், அதன் மரணித்த தலைவர்களின் ஒசியத்துக்களையும், கட்சியின் சின்னங்களையும், கட்சியின் கீதங்களையும் பின்பற்றுகிறார்கள்.

ஒவ்வொரு அரசியல் கட்சியும், அதன் தலைவர்களும், அதன் உயர்பீட உறுப்பினர்களும், அதன் வேட்பாளர்களும் பல மாயாஜால வித்தைகளையும், பல நாடகங்களையும், பல திரைப்படங்களையும், பல புராணக் கதைகளையும் அரங்கேற்றுகிரார்கள். அவர்கள் தேர்தல் மேடையில் போடும் வேடங்களும், மக்கள் முன்னிலையில் செய்யும் சத்தியங்களும் மக்களின் வாழ்வில் பால் வார்ப்பதைப் போல் தோன்றுகிறது. 'அது வெறும் கானல் நீராகவே அமைகின்றது'.

மக்கள் ஏதாவது சேவை செய்ய வேண்டும் என்ற உள்ளத் துடிப்போடு உள்ள அரசியல் கட்சி, தங்களால் அல்லது தங்கள் கட்சியால் முன்னெடுக்கப்பட்ட அல்லது முன்னெடுக்கப்படவிருக்கும் கடந்து கால, நிகழ் கால அல்லது எதிர்கால திட்டங்களை முன்வைத்து தேர்தல் பிரச்சாரங்களை செய்யும். அந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பார்த்தோமானால் மக்கள் சனத்திறல் இல்லை. வெறச்சோடிப் போயிருக்கும். 

ஒரு சில கட்சிகள் சமகால அரசியலுக்கு சாதகமான வகையில் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களை அமைத்துக் கொள்ளும். அவர்கள் பிரச்சாரத்தில் சமகால பிரச்சினைகளைப் பற்றி அக்குவேரையாக ஆணி வேரையாக மக்களுக்கு விளங்கப்படுத்துவார்கள். சனத் தொகை மடைதிறன்ட வெள்ளம் போல் காட்சி அழிக்கும், கடைசியில் பார்த்தால் கட்சி தேர்தலில் வெற்றியடைந்திருக்கும், நமது சம்மாந்துறை மண்ணும், மக்களும் கைசேதமடைந்திருப்பார்கள்.

கடந்த காலங்களில் நாம் விட்ட தவறின் மூலம் இளக்கப்பட்ட பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு எதிர் காலத்தில் மீட்டெடுப்பது என்பதில் இன்னும் மக்கள் தெளிவடையவும் வில்லை. அரசியல் தலைவர்களும், புத்திஜீவிகளும், கல்விமான்களும் தெளிவுபடுத்தவும் இல்லை. சம காலத்தில் சேற்றில் முளைத்த காலானைப் போல் இன்று புது புது தலைவர்கள் முளைத்துவிட்டார்கள். அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு ஆசைப்படுவது, உள்ளுராட்சி மன்ற மட்டத்தில் இருந்து உயர்வடைவோம் என்றல்ல, அவர்கள் நேரடியாக பாராளுமன்ற உறுப்பினர் என்றும் மந்திரி சபையில் மந்திரி என்றும், அவர்கள் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை சரக்கு கடையில் கிடக்கும் பருப்பு என நினைத்துள்ளார்கள். இன்று நமது மண்ணின் அரசியல் பணம் படைத்தவர்களுக்கு அடகு வைக்கப்பட்ட ஒரு பொருளாக மாரிவிட்டது. அரசியலுக்கு வருவது என்றால் பணம் படைத்தவன் மட்டும் தான் வர வேண்டும் என்ற மன நிலை மக்கள் மத்தியில் மாற்றப்பட்டுள்ளது. சம்மாந்துறையில் பிறந்து ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலில் நுழையும் உரிமை உண்டு. 'ஒவ்வொரு இளைஞனும் உங்களை நீங்கள் இந்த சமூகத்தின் தலைவராக வருவதற்து தயாராக வேண்டும், அதற்கு பணமோ! குழமோ! தடையல்ல...'

இன்று நீங்கள் ஒவ்வொருவரும் அவதானித்து பார்த்தீர்களானால் அரசியல் தலைவர்களிடம் கொள்கை இல்லை... கொள்கை இருப்பவர்களிடம் மக்கள் இல்லை... அது தான் இன்றைய சம்மாந்துறையின் அரசியல் நிலை.

சமகாலத்தில் ஒரு அரசியல் கட்சியில் உள்ள நபர் கட்சியில் உள்ள போது கட்சியை வாழ்த்துகிறார், கட்சியின் கொள்கையை பரப்புகிறார், கட்சியின் தலைமையை புகழ்கின்றார், இதே நேரத்தில் தேர்தல் ஒன்று குரிக்கிடுகிறது. அத் தேர்தளில் அக் கட்சி அந் நபருக்கு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்க வில்லை... அப்பொழுது அவரது அறிக்கை மாறுகிறது. அவரது நாக்கு தடம் புறழ்கிறது... அச் சந்தர்ப்பத்தில் கடந்த காலத்தில் வாழ்த்திப் பேசிய கட்சியை தூற்றியும், கடந்த காலத்தில் தூற்றியும், தூசித்தும் பேசிய காட்சியை வாழ்த்தியும் பேச ஆரம்பிக்கின்றார் 'இது தான் சந்தர்ப்ப வாத அரசியல் வாதியின் நிலை'

நாம் எவ்வாறான சரியான பிரதிநிதியை சம்மாந்துறை மண்ணுக்கும், மக்களுக்கும் தெரிவு செய்ய வேண்டும்?

1. ஒழுக்கம் மற்றும் மார்க்க விழுவியம் கொண்டவராக இருக்க வேண்டும்.
2. சந்தர்ப்பவாத அரசியலை செய்யாதவராக இருக்க வேண்டும்.
3. நீதியையும், நேர்மையையும் நிலை நாட்டி, சம்மாந்துறை மண்ணுக்கும், மக்களுக்கும் 'நல்லாட்சி' யை உருவாக்குபவராக இருக்க வேண்டும்.
4. மக்களிடம் அன்பாகவும், பன்பாகவும் பேசக் கூடியவராக இருக்க வேண்டும்.
5. சம்மாந்துறை மண்ணினதும், மக்களினதும் நலனில் தூரநோக்கு சிந்தனையோடு செயல்படுவராக இருக்க வேண்டும்.
6. தேர்தல் காலங்களில், நாம் பெற்றெடுத்த இளைஞர்களை பிழையான வழியில் நடத்தாதவராக இருக்க வேண்டும்.
7. கடந்த கால தேர்தல்களில் நமக்கு தரப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியவராக இருக்க வேண்டும்.
8. இலஞ்சம் மற்று ஊழல்களில் ஈடுபடாதவராகவும், அதனை விரும்பாதவராகவும் இருக்க வேண்டும்.
9. எச் சந்தர்பத்திலும் அரசியல் மற்றும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் செயல்படுபவராக இருக்க வேண்டும்.

போன்ற நற்குணங்களை உடைய ஒரு மனிதனை, நமது மண்ணில் தெரிவு செய்வதன் மூலம் தான், சிறந்த அரசியல், கலாசார, பண்பாடுகளை நமது சம்மாந்துறை மண்ணுக்கும், மக்களுக்கும் கொடுக்க முடியும்.

0 comments:

Post a Comment

I was born on 1992.05.28 in trade and agricultural family. I am currently a member of the Sri Lankan Youth Parliament and Amir Ali in the public library, a computer data records and bring the serving.

From a young age for me! Was one of the most committed to community service. In the parliamentary elections held on 2013.05.06 youth I competed with the most votes won by the likes !!!

My career ambition, our Samanthurai city's politics, corruption-free, the people and the service can do, decent, respectful, people's minds and realize, people and love, people's confidence will be handed ballots received by the positions of the people, the executive leaders need to create.

Distinguishing between the leader, it would not be easy. To make this work effectively, every person born in Samanthurai should think and act.

"We try to present all the success! !!! The period of time for our generation '