Sunday, March 27, 2016

விவசாயிகளுக்காக குரல் எழுப்பிய எத்தனை தலைமைகள்!


இன்று நாங்கள் கண் ஊடாக காணக் கூடிய காட்சிகள் தான். ஒரு விவசாயி தனது நிலத்தை பதப்படுத்தி, நெல் விதைகளை விதைத்து, உயர்தர உரங்களையும், கிருமி நாசிநிகளையும் தெலித்து, பல மாதங்களாக பாதுகாத்து அறுவடை செய்கின்றான்.

அதன் பின் எமது விவசாயிகளின் நிலை என்ன?

அறுவடை செய்த நெல்களை நியாயமான விலைகளுக்கு விற்பனை செய்ய முடியாமல் தின்டாடுகிறார்கள். எத்தனையோ விவசாயிகள் விவசாயம் மூலம் ஏற்பட்ட கடன்களை ஈடு செய்வதற்காக நெற்களை நஷ்டத்தில் விற்பனை செய்கின்றார்கள். பல மாதங்கள் இரவு பகலாக கஸ்டப்பட்டவர்களின் நிலை என்ன? (இவ் விவசாயிகளைப் பற்றி நல்லாட்சி அரசு சிந்திக்குமா!

ஏன் என்றால் இவ் நல்லாட்சி அரசை வித்திடுவதற்கு உரமாக இருந்தவர்கள் எமது விவசாயிகளே! கடந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் கரங்கள் நல்லாட்சி அரசுக்கு புள்ளடி இடுவதற்கு தயாரானதே! இவ் வெற்றிக்கு காரணம்.

விவசாயிகளுக்கான உரமானிய விநியோக முறையை திட்டத்தை இலகுபடுத்த வேண்டும்.

கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் மக்கள், தங்கள் விவசாயத்துக்குரிய உரத்தை இலகுவாக எடுக்க கூடியதாக இருந்தது. (இவ் வாட்சியில் உரமானிய விநியோகத்தில் பல ஊழல்கள் இருப்பதாக விமர்சனங்கள் உள்ளது) என்றாலும் நல்லாட்சியில் உழல் அற்ற முறையில் விவசாயிகளை சென்றடைய வேண்டும் என்ற அரசின் என்னம் வரவேற்கத்தக்கதொரு விடயமாகும்.

என்றாலும் கடந்த போக நெற்செய்கையின் போது விவசாயிகளுக்கு அறிவுருத்தப்பட்டது. கட்டாயம் தேசிய சேமிப்பு வங்கியில் வங்கிக் கணக்குகள் இருக்க வேண்டும். இப் போகம் விவசாயிகளுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது 'இலங்கை வங்கி அல்லது மக்கள் வங்கி', அடுத்த போகம் எவ் வங்கியில் திறக்க அறிவுருத்தல் வரப்போகிதோ என மக்கள் அஞ்சுகின்றனர்.

மேற் கூறப்பட்ட வங்கி ரீதியான நடவடிக்கைகள் மூலம் விவசாயிகளின் பணங்கள் மறைமுகமாக முடக்கப்படுகின்றனர். இதற்கு அரசாங்கம் தீர்வுத்திட்டம் ஒன்றை வளங்க வேண்டும். இலங்கையில் விவசாயத்துறை முக்கிய பங்கு வகிப்பதால் அதற்கென்ற விஷேட வங்கி நாடு பூராகவும் திறக்கப்பட வேண்டும். அத்தோடு இலங்கை நாட்டுக்கென்று ஒரு சிறந்த 'விவசாய கொள்கை' உருவாக்கப்பட வேண்டும்.

மேற் கூறப்பட்ட விடயங்களை கருத்தில் கொண்டு, நமது தலைவர்கள் பாராளுமன்றம், மாகாண சபை, ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி ஆகியோரின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும்.

                                                              பெரீஸ் முஹம்மட் பாறூக்,
                                                              (முன்னால் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்),
                                                               இளைஞர் அமைப்பாளர் - தேசிய காங்கிரஸ்.


0 comments:

Post a Comment

I was born on 1992.05.28 in trade and agricultural family. I am currently a member of the Sri Lankan Youth Parliament and Amir Ali in the public library, a computer data records and bring the serving.

From a young age for me! Was one of the most committed to community service. In the parliamentary elections held on 2013.05.06 youth I competed with the most votes won by the likes !!!

My career ambition, our Samanthurai city's politics, corruption-free, the people and the service can do, decent, respectful, people's minds and realize, people and love, people's confidence will be handed ballots received by the positions of the people, the executive leaders need to create.

Distinguishing between the leader, it would not be easy. To make this work effectively, every person born in Samanthurai should think and act.

"We try to present all the success! !!! The period of time for our generation '