Saturday, April 9, 2016

அம்பாறை மாவட்டம் சகல சமூகங்களினதும் சமாதான பூமி...

திகாமடுல்ல, ஆதிகால ஆரிய குடியேற்றங்களில் ஒன்றாகும். வம்சக் கதைகளின் படி இக்குடியேற்றமானது மிகக்குறுகிய காலத்தில் பலம்மிக்க அரசியல் தலைமைத்துவத்தை உருவாக்கியது. தீககாமினியின் மகன் பண்டுகாபய குமாரரினால் அனுராதபுரம் தலைநகரமாக மாற்றப்பட்டது. அதிலிருந்து திகாமடுல்ல அனுரபுர அரசனின் ஒரு பிரதேச நிர்வாக பிரிவாகியதுடன், அது பிரதான தானியக் களஞ்சியமாகவும் மாறியது. பொலன்னறுவை இராச்சியம் வீழ்ச்சியடைந்து அரசியல் அதிகாரம் தென்மேற்குப் பிரதேசத்துக்கு சென்றதால் திகாமடுல்லையில் காடு வளரத் தொடங்கியது. பின்னர் மலையக மன்னனின் நிர்வாகத்தின் கீழ் செயற்பட்டு 1815ல் பிரித்தானிய அதிகாரத்திற்கு உட்பட்டது. பிரித்தானிய நிர்வாக முறையின் கீழ் திகாமடுல்லைக்கு மிகக்குறைந்த கவனமே செலுத்தப்பட்டது.

இதனால் இப்பிரதேசத்தில் மிக வேகமாக களைகள் வளரத் தொடங்கியது. அவ்வாறிருந்த போதிலும் பிரித்தானிய ஆட்சியின் இறுதிக்காலப்பகுதியில் உள்நாட்டவர்கள் நிருவாகத்தில் தொடர்புபட்டதனால் விவசாயத்தைக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் எடுத்த முயற்சியின் பயனாக திகாமடுல்லையின்பால் அரசாங்கத்தின் கவனம் ஈர்க்கப்பட்டது. 1949ம் ஆண்டில் சுதந்திர இலங்கையின் நிருவாகத்தின் கீழ் இப்பிரதேசத்தை மையமாகக் கொண்டு பிரதான பல்முறையான அபிவிருத்தி விடயங்களில் ஒன்றான கல்லோயாத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இப்பிரதேசம் மிகக் குறுகிய காலத்தினுள் முறையான திட்டமிடலின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டு, 1961ல் அம்பாறை மாவட்டம் என்ற பெயரில் புதிய நிர்வாக மாவட்டமாக அரசாங்க நிருவாக கட்டமைப்பிற்குள் உட்பட்டது. பின்னர் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தேர்தல் பிரிவுகள் உருவாக்கப்பட்ட போது 13ம் இலக்க தேர்தல் பிரிவாக திகாமடுல்ல என பெயர் குறிப்பிடப்பட்டது.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டம் ; மிகவும் செழிப்பாக விளங்குவதுடன், நிர்வாகத்திலும் அம்பாறை பிரதான நகரமாக விளங்குகின்றது. நகர எல்லையினுள் முக்கியமான மூன்று வாவிகளையும் வனவிலங்குகள் சரணாலயத்தையும் கொண்டிருப்பது அம்பாறை நகரத்தை மாத்திரம் பிரதிபலிக்கும் விடயமாகும்.
2012ஆம் ஆண்டின் சனத்தொகை 648,057 ஆகும். இதில் 43.58மூ இலங்கை முஸ்லிம் இனத்தவர்களையும், 39.03மூ இலங்கை சிங்கள இனத்தவர்களையும், 17.39மூ இலங்கைத்தமிழ் இனத்தவர்களையும் கொண்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் 20 பிரதேச செயலகப் பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளதுடன், அதில் 20 பிரதேச செயலகங்களும் மக்களின் நிர்வாகத்திற்காக உள்ளடக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் பௌதீக அமைவிடம் பிரதானமாக சமதரையைக் கொண்டுள்ளது. அத்துடன் ஆங்காங்கே காணப்படுகின்ற மலைத்தொடர்களைக் கொண்ட சில பிரதேசங்களையும் காணக்கூடியதாக உள்ளது. அம்பாறை மாவட்டத்தின் பரப்பளவு 4,415 சதுர கிலோமீற்றர் அளவில் ஆவதுடன், இம்மாவட்டம் 193 சதுர கிலோமீற்றர் உள்ளக நீர் நிலைகளினால் சூழப்பட்டுள்ளது.


அம்பாறை மாவட்டத்தின் எல்லை
வடக்கில் - மட்டக்களப்பு, பொலன்னறுவை மாவட்டங்கள்
கிழக்கில் - வங்காள விரிகுடா (இந்து சமுத்திரம்)
தெற்கில் - அம்பாந்தோட்டை மாவட்டம்
மேற்கு மற்றும் தென்கிழக்கில் - மொனறாகலை மாவட்டம்
வடமேற்கில் - பதுளை, மாத்தளை மாவட்டங்கள்

கால நிலை
வருடாந்த மத்திய வெப்பநிலை 33 பாகை செல்சியஸ் ஆகும். அதிகூடிய வெப்பநிலை 36 பாகை செல்சியஸ் ஆகும். ஆகக் குறைந்த வெப்பநிலையாக 24 பாகை செல்சியஸ் ஆக உள்ளதுடன் இந் நிலை டிசம்பர், ஜனவரி மாதங்களில் காணப்படும். வருடாந்த மழைவீழ்ச்சி 1,400 மி.லீ அளவில் உள்ளதுடன் பிரதானமாக தென்மேல் பருவப்பெயர்ச்சிக்காற்று மழை கிடைக்கிறது. பொதுவாக மார்ச் முதல் செப்டம்பர் வரை உலர்காலமாகவும் ஒக்டோபர் முதல் பெப்ரவரி வரை மழைக்காலமாகவும் உள்ளது.

இவ்வாறு பல அம்சங்களிலும் சிறப்புற்று விளங்கும் அம்பாறை மாவட்டமானது இன, நிற, மத வேறுபாடுகள் மறந்து சமத்துவ, சகோதரத்துவ, மனிதப்பண்புகள் நிறைந்த சகல சமூகங்களினதும் சமாதான பூமியாக விளங்குவது மிகவும் பிரம்மிக்கத்தக்க ஒரு விடயமாகும்.

தகவல் - மாவட்ட செயலகம், அம்பாறை
                   சமாதானத்திற்கான கற்கைகள் நிலையம், இலங்கை

பெரீஸ் முஹம்மட் பாறூக், 
(முன்னால் இலங்கை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்),
 இளைஞர் அமைப்பாளர்,
தேசிய காங்கிரஸ்.

0 comments:

Post a Comment

I was born on 1992.05.28 in trade and agricultural family. I am currently a member of the Sri Lankan Youth Parliament and Amir Ali in the public library, a computer data records and bring the serving.

From a young age for me! Was one of the most committed to community service. In the parliamentary elections held on 2013.05.06 youth I competed with the most votes won by the likes !!!

My career ambition, our Samanthurai city's politics, corruption-free, the people and the service can do, decent, respectful, people's minds and realize, people and love, people's confidence will be handed ballots received by the positions of the people, the executive leaders need to create.

Distinguishing between the leader, it would not be easy. To make this work effectively, every person born in Samanthurai should think and act.

"We try to present all the success! !!! The period of time for our generation '