Monday, October 23, 2017

எனது கேள்விக்கு பதில் தரமுடியுமா?

எனது கேள்விக்கு பதில் தரமுடியுமா?


மாநகர சபை தேர்தலில் போட்டியிடுங்கள் என்று சொல்கிறார்கள். அப்படி போட்டியிட்டால் எனது ஆதரவாளர்களை தடபுடலாக கவணிக்கவேண்டும், போஸ்டர்கள், நோடீஸ் என்று எக்கசக்க செலவுகள் செய்யவேண்டும். குறைந்தது பத்து லட்சமாவது செலவாகும் என்று வைத்துக்கொள்வோம்.

தேர்தலில் தோல்வியடைந்தால் தலையிலே துண்டைப்போட்டுக் கொண்டு படுத்து விடலாம், (அதன் பிறகு குடும்பத்துக்குள் மஃரம் ஒழும்பும் அதுவேற)

இப்படி செலவு செய்து வெற்றியடைந்து விட்டோம் என்று வைத்துக் கொள்வோம், நான் செலவு செய்த காசை லாபத்தோடு அரவிடவேண்டும் அல்லவா? அதனை எப்படி பெறலாம் என்று கூறுங்கள் என்று கேட்டால், அதற்கு பதிலாக (அது, இது) செய்து உழைக்கலாம் என்று பதில் கூறுகின்றார்கள்.

அப்படியென்றால் பொதுச்சொத்தை கொள்ளையடித்துத்தானே அந்த பணத்தை சம்பாதிக்கவேண்டும். அப்படியென்றால் அது கராம்தானே என்று கேட்டால்,  அதற்கு பதில்  உங்களுக்கு ஒன்றும் தெறியாது அரப்படிச்ச கதை கதைக்கின்றீர்கள் என்று கூறுகின்றார்கள். அது ஏன் என்றுதான் புரியவில்லை.

நான் சமூகத்துக்காக பேசவேண்டும், போராடவேண்டும் என்றால், பொதுமக்கள்தானே எம்மை வெற்றியடைய வைக்கவேண்டும். அதற்கு நான் ஏன் பணம் செலவு செய்யவேண்டும்?

எனது காலத்தையும், நேரத்தையும், எனது தொழிலையும் ஓரம் கட்டிவிட்டு இவர்களுக்காக பாடுபட நான் ஏன் இவர்களுக்கு பணம் செலவு செய்யவேண்டும்?

அந்த பணத்தை லாபத்தோடு திரும்ப பெறுவதற்கு, பொதுமக்களின்  சொத்தை  நான் ஏன் சுரண்ட வேண்டும்?

அப்படி கொள்ளையடிக்கும் பணத்தில் வாழ்ந்தால் இறைவன் அதற்கு பரக்கத் செய்வானா?

இவ்வளவு பிரச்சினைகளையும் வைத்துக்கொண்டு, பணத்தையும்  செலவு செய்துகொண்டு,  எனக்கு வாக்களியுங்கள் என்று வீடுவீடாக சென்று கெஞ்சுவது ஏன்?

இவர்கள் வீடுவீடாக அழைவது மக்களுக்கு சேவை செய்யவா? அல்லது பதவிக்காகவா? அல்லது கொள்ளையடிக்கவா? என்று புரியவில்லையே..!

ஒரு பள்ளிவாசலில் தலைவராக இருங்கள் அல்லது, எங்களுக்காக பாடுபட தேர்தலில் போட்டியிடுங்கள் என்று மக்கள்தானே எங்களை இனம் கண்டு கெஞ்சி கூத்தாடி அந்த இடத்துக்கு அனுப்பவேண்டும்.

அதற்கு அப்புரம்தான், நாம் என்ன செய்வது மக்கள் விடுவதாக தெறியவில்லை, காலத்தையும், நேரத்தையும் ஒதுக்கி மக்களுக்காக போராடுவோம் என்று நினைத்து செல்பவன்தானே உண்மையில் மக்களுக்காக போராடுவான்.

அவன் அங்கே சென்று மக்களுக்காக பாடுபடுவானா அல்லது விட்ட பணத்தை எப்படி எடுக்கலாம் என்று வழிதேடுவானா? 
(பதவியை கேட்டுத் தெறிபவனுக்கு பதவியை கொடுக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் அவர்கள் சும்மாவா சொன்னார்கள்).

அப்படி பதவியை கேட்டு அழைந்து தெறிபவன்தான் உண்மையான சமூகத்தின் எதிரி என்பதை நமது சமூகம் ஏன்தான் புரியமறுக்கின்றதோ தெறியாது?

ஒரு செலவும் செய்யாமல், மக்களாகவே இனம்கண்டு ஒருவரை தேர்ந்தெடுத்து அனுப்புவார்களாக இருந்தால் அவன்தானே   உண்மையான மக்களின் பிரதிநிதி?

(இதனை உங்களின் சிந்தனைக்காகத்தான் எழுதினேன் வேறு நோக்கம் ஒன்றும் இல்லை)

எம்எச்எம்இப்றாஹிம்
கல்முனை.

0 comments:

Post a Comment

I was born on 1992.05.28 in trade and agricultural family. I am currently a member of the Sri Lankan Youth Parliament and Amir Ali in the public library, a computer data records and bring the serving.

From a young age for me! Was one of the most committed to community service. In the parliamentary elections held on 2013.05.06 youth I competed with the most votes won by the likes !!!

My career ambition, our Samanthurai city's politics, corruption-free, the people and the service can do, decent, respectful, people's minds and realize, people and love, people's confidence will be handed ballots received by the positions of the people, the executive leaders need to create.

Distinguishing between the leader, it would not be easy. To make this work effectively, every person born in Samanthurai should think and act.

"We try to present all the success! !!! The period of time for our generation '